எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க புலனாய்வுத்துறை!

மெரிக்க தேர்தலில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளது.இத்தேர்தலில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பிற்கும், முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்த விரும்பும் நாடுகளில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உள்ளன என்று அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வுத்துறை (என்.சி.எஸ்.சி) தலைவர் வில்லியம் இவானினா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெளிநாடுகள் மாநிலங்களில் வாக்களிப்பைத் தடுக்க ரகசிய மற்றும் வெளிப்படையான செல்வாக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சீனா விரும்பவில்லை என்றும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடனை காயப்படுத்த ரஷ்யா விரும்புகிறது என கூறி உள்ளது.

வெளிநாடுகள் வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும், அமெரிக்க கொள்கைகளை மாற்றவும், "நாட்டில் கருத்து வேறுபாட்டை அதிகரிக்கவும்" முயற்சிக்கின்றன. மேலும் நமது ஜனநாயக வழிமுறையில் அமெரிக்க மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

எவ்வாறாயினும், நமது எதிரிகளுக்கு வாக்களிப்பு முடிவுகளில் தலையிடுவது அல்லது கையாளுவது கடினம் என்று கூறி உள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :