எப்.முபாரக்-

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (19) வியாபாரச்சந்தையும் கண்காட்சியும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து மேற்கொள்ளப்படும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு இதன் மூலம் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு கிட்டுகின்றது.
பிரதேச மட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களது தொழில் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துமாறும் அவர்களது உற்பத்திப்பொருட்களை பிரதேச செயலக அடிப்படையில் மேற்கொள்ள தேவையான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்டு வருவதாக இதன்போது மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.பிரளாநவன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பிரதேச தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment