மருதானையில் உள்ள 797 வத்தையில் உள்ள காணியில் தொடா்மாடி வீடுகள்..

அஸ்ரப் ஏ சமத்-


கொழும்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமாக உள்ள காணிகளில் பல்வேறு தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கும் புதிய திட்டங்கள் பற்றி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரேராவினால் புதிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இந்திக்க அனுரத்தவிடம் முன்மொழியப்பட்டன.

புதிதாக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்த நேற்று(18) வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் எதிா் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் ப்றறி அதிகாரிகளுடன் கலந்துரையாடினாா். இக் கூட்த்தின்போது அதிகார சபையின் தலைவா் பின்வரும் புதிய திட்டங்களை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினாா்.

மருதானையில் உள்ள 797 வத்தையில் உள்ள காணியில் தொடா்மாடி வீடுகள், கண்டியில் குண்டகசாலையில் உள்ள அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் வீடுகள் நிர்மாணித்தல், மொரட்டுவை சொய்சா புரவில் உள்ள காணியில் தொடா்மாடி வீடுகள் நிர்மாணித்தல், மட்டக்குழி காக்கைதீவில் உள்ள காணியில் தொடா்மாடி வீடுகள் நிர்மாணித்தல், கம்பகா மாவட்டத்தில் அதிகார சபைக்குச் சொந்தமான இரண்டு காணித்துண்டுகளில் வீடமைப்புக் கிராங்கள் , கொழும்பில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியலத்தினை ஊழியா்களை செத்சிரிபாயவுக்கு இடமாற்றிய பின்னா் தலைமைக் காரியாலயத்தின் காணியில் 30 மாடிகள் கொண்ட சொப்பிங் மோல், லக்சரி வீடுகள், வியாபார தளங்கள் வாகன தரிப்பிடங்கள் அமைப்பதற்கும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பேரோவினால் பல திட்டங்கள் முனமொழியப்பட்டன.

அத்துடன் தற்பொழுது இந்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகணாத்தில் 600 வீடுகள் 300 மில்லியன் ருபா செலவிலும் தெற்கில் மாத்தறை, கம்பாந்தோட்டை , காலி மாவட்டங்களில் 600வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இந்திய அரசாங்கம் நிர்மாணப்பணிகள் முடிந்த பிற்பாடே அதற்குரிய நிதிகளை வழங்கி வருகின்றன. 

 கடந்த கால ஆட்சியின்போது மொன்றாகலை, கொழும்பு கம்பாந்தோட்ட போன்ற மாவட்ட அலுவலகங்களில் பல்வேறு நிதிமோசடிகள், ஊழல்கள் இடம் பெற்றுள்ளன. அவைகள் உள்ளக கணக்காய்வாளா்கள் அதிகாரிகளினால் விசாரனை மேற்கொண்டு வரப்படுகின்றன.அதற்கமைவாக கம்பாந்தோட்டை முன்னாள் மாவட்ட முகாமையாளா் உட்பட 4 அதிகாரிகள் பொலிஸ் குற்றப்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளன. கம்பாந்தோட்டையில் காணி கொள்வனவு செயவத்தில இவா்கள் 600 மில்லியன் ருபா மோசடி செய்யப்பட்டதையடுத்தே இச் சம்பவம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வீடுகள் நிர்மாணிக்கவென338727 வீடுகளுக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவைகள் மீள அறவீடுவதில் அதிகாரிகள் பாரிய சிக்கல்களை எதிா்நோக்கி வருகின்றனா். இதுவரை 30வீத அறவீடுகளே அறவிடப்பட்டுள்ளன. இக் கடன்கனை மீள அறவிடுவதன் மூலம் மேலும் பல குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்களை மாவட்ட அதிகார சபைகள் மூலம் வழங்க முடியும். ஏற்கனவே முன்னாள் அமை்சசா் ஆரம்பித்த சகல வீடுகளும் முற்றாக நிர்மாணிக்க முடியாமையினால் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளன. இவ் வீட்டுப் பயணாளிகள் மிகுதி வீட்டுக்கடன்களை வேண்டி அடிக்கடி தலைமைக் காரியாலயத்திற்கு வந்து முறையிடுகின்றனா். நாடு முழுவதில் 2500 வீட்டு உரிமைப்பத்திரங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எதிா்வரும் அக்டோபா் முதல் வாரத்தில் அனுஸ்டிக்கப்பட உள்ள உலக குடியிருப்பு தினத்தில் பிரதம மந்திரி தலைமையில் சகல உறுதிப்பத்திரங்களையும் உரிய வீட்டுரிமையாளருக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் ரேனுகா பெரோ இங்கு உறுதியளித்தாா்.


The National Housing Development Authority's upcoming development plan is presented to the State Minister of

Rural Housing and Construction and Building Material Indika Anuruddha. He was on visit at the National Housing Development Authority and Conducted Management meeting was held on 18.08.2020, at the NHDA Auditorium,

The Chairman of the Housing Development Authority, Renuka Perera, State Ministry's Secretary and the NHDA General Manager and other officials were participated this meeting . State Minister Indika also discussed with the officers about the upcoming housing program of the National Housing Development Authority' on going housing programme, Chairman of NHDA briefed some new housing projects proposal the following areas , Anuradhapura Middle income housing project ,Tangala, Soyspura Rathmalana, Mattagoda , Maligawatha 80 housing units catering of middle income category 10 no of storied, relocation housing block proposed for the site on going projects with private company participating Mount Clifford housing , Green Valley housing and Sea breeze housing project in Colombo District , There is a heavy demand for affordable housing with acceptable spatial standards and infrastructure and services needs for government officers in Urban areas,

Further discussed with the official regarding NHDA ongoing housing programme "one house for country tomorrow's housing program and the projects to be implemented in the future. Indian Aid housing projects 2019 constructing 2400 houses island wide the Northern province Jaffna , Mannar, Mualaithevu,Killinochi and Vavuniya Districts 25 housing model villages, for 600 houses for Rs. 300 million, Galle, Mattara, and Hamabanthodda 26 housing model villages total 600 houses for Rs.300 million , NHDA proposed with State Bank housing loans 7 - 2.5 millions. NHDA 24 Districts, given housing Loan 338727 families presently loan recoveries up to April 30%. this month target Rs.200 million said Chairman 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :