ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விஹாரையில் இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பௌத்த மதக்குருமார்கள், ஏனைய மதத் தலைவர்கள், முப்படையினர், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
களனி ரஜமஹா விஹாரையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாரிய வெற்றியை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment