திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(17) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ்.சிறிதரனுக்குமிடையிலான சந்திப்பு பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் நடை
பெற்றதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்தார்.
இதன் போது இம்மாவட்டத்தில் நீண்ட காலமாக மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமான வைத்தியர்கள் நியமிக்கப்படாமை குறித்து பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தியதாகவும்,கூடிய விரைவில் அமைச்சருடன் கலந்துரையாடி வைத்தியர்களை நியமிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment