கொவிட்-19 பிரதேச மட்ட பாதுகாப்பு குழு கூட்டம்


பாறுக் ஷிஹான்-
கொவிட்-19 தொடர்பில் பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதேச மட்டங்களில் எடுக்கவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொவிட் 19 தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெற்றதுடன் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் சவளக்கடை சமூக சேவை சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எம்.எ முனீஸ் மத்திய முகாம் சமூக சேவை பிரிவு பொறுப்பதிகாரி பி.ஜி ரத்னசிறி நாவிதன்வெளி பிரதேச சபை உத்தியோகத்தர் பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும் எதிர்காலத்தில் இப்பகுதியில் இடம்பெறவுள்ள பொது நிகழ்வுகள் மற்றும் பொதுமக்களின் கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமுல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் முன்வர வேண்டும் என பிரதேச செயலாளர் அறிவுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :