தோற்றுவிட்டோம் என்று கவலைப்பட வேண்டாம் மன ஆளுமை, தைரியம் எம்மிடத்தில் வரவேண்டும் - அமீர் அலி


சுஆத் அப்துல்லாஹ்-
வெற்றியோ, தோல்வியோ அதை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் அதற்கென்று மன ஆளுமை, தைரியம் எம்மிடத்தில் வரவேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நேற்று (6) அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் தோற்று விட்டார் இவர் வென்று விட்டார் என்று சந்தோசம் கொண்டாடும் நேரமில்லை. இது இறைவனின் நாட்டப்படி நடைபெற்றுள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் நாம் தோற்று விட்டோம் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் தைரியமாக இருங்கள் நீங்கள் தைரியமாக இருப்பதுதான் எனக்கு தைரியத்தைத் தரும்.
பணத்துக்கும் அரிசிக்கும் வாக்குகளை வழங்குகின்ற மாற்றம் வரவேண்டும் என்று நீங்கள் அனைவரும் பிரார்த்னை செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் எதிர்காலத்தில் தேர்தல்களை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை இந்தச் சமூகம் எதிர்நோக்கும்.
எதிர்காலத்தில் இந்த கல்குடாவை நான் அனாதையாக விட்டுச் செல்ல மாட்டேன் என்னால் எந்தளவுக்கு இந்த சமூகத்தை பார்க்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் பார்ப்பேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :