மருதமுனை-
நடைபெற்று முடிவடைந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில்,அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சட்டத்தரணி முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி சிபான் வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2015 களில் இருந்து கருவாக்கி 2020ல் முஷாரப் என்கின்ற இளம் ஆளுமையை பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கியுள்ளது.
பொத்துவில் மக்களின் 60 வருட பாராளுமன்ற தாகம் திகாமடுல்லயில் மயிலுக்காக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 42819 ஆதரவாளர்களின் வலிமையான உத்தரவாதத்தின் ஊடாக தீர்க்கப்பட்டிருக்கின்றது.
திகாமடுல்லயின் பத்துத்திக்கும் போட்டியில் ஈடுபட்டிருந்த பத்து பிரதான வேட்பாளர்களின் தியாகத்தினை பொருந்திய இறைவன் முஸ்ஸாரபுக்கு அதனை நஸீப் ஆக்கியுள்ளான் அல்ஹம்துலில்லாஹ்.
இந்த 2020 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக வாக்களித்த திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் மக்களுக்கும் , குறிப்பாக மருதமுனை மக்களுக்கும் வாழ்த்துக்களும் , இதயம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்தோடு இந்த தேர்தலில் திகாமடுல்ல தொகுதியில் வெற்றியீட்டிய முஸ்லிம் உறுப்பினர்களாகிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய அதாவுல்லா அவர்களுக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமாகிய ஹரீஸ், முன்னாள் பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது வாழ்த்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment