ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தொலைபேசி கலந்துரையாடலில் தங்களுடன் இணைந்து செயற்படும்படி மைத்திரிக்கு சஜித் அழைப்பு விடுத்திருப்பதாகவும் ஒருசில சிங்கள இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும் இதுபற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தருடன் வினவியபோது, இவ்விருவருக்கும் இடையே எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று கூறினார்.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்கட்சியுடன் இணைவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment