பஸிலின் உயிருக்கு ஆபத்து: கொலை முயற்சியா? பரபரப்பு தகவல் !



முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவை தீர்த்துக்கட்டுவதற்கான சூழ்ச்சி இடம்பெறுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் முன்னாள் எம்.பி லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இத்தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

முன்னாள் அமைச்சல் பஸில் ராஜபக்சவை அரசியலிலிருந்து நீக்கும் அல்லது அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்கான சூழ்ச்சி குறித்து கொழும்பிலுள்ள பிரபலமாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூன்று நபர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை குறித்து அண்மைய நாட்களில் இராஜதந்திர செயற்பாட்டினை முன்னெடுத்தவர், முன்னாள் அமைச்சர் மற்றும் இன்னுமொரு நபர் என மூன்று பேர் இவ்வாறு பேசியுள்ளனர்.

எனவே பஸில் ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அதுபற்றி விசாரணை செய்யும்படியும் பொலிஸ் பாதுகாப்பு கோரியும் பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறையிட்டோம் என்று லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :