கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையரொருவர் சவூதி அரேபியாவில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான மீராசாஹிப் அப்துல் ரசீத் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளதாக கொன்சியூலட் ஜெனரல் அலுவலக பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றும் இவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 21 நாட்களாக ஜித்தாவிலுள்ள சுலைமான் பகி எனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும்
இவரின் ஜனாஸாவினை அவசரமாக ஜித்தா நகரில் நல்லடக்கம் செய்தவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -