இவ் வருட சிறுபோக நெல் அறுவடை நிறைவடைந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கிடையிலான சுமார் இரண்டு மாத கால இடைவெளியில் வெற்று நிலமாகக் கிடக்கும் நெற்காணிகளில் மூன்றாம் பாசிப்பயறு,கெளபி ஆகிய செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல் நிகழ்வு உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் (19) இடம் பெற்றது.
விவசாயத்திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் கமநல சேவைகள் மத்திய நிலையம், மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் சம்மாந்துறை மல்வத்தை விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஆகியவைகளின் நெறிப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இப்பயிர்ச் செய்கையானது சுமார் நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மூன்றாம் போகமும் இப்பயிர்ச் செய்கையினை அனைத்து விவசாய நிலங்களிலும் செய்கையிட விவசாயத் திணைக்களத்தினால் வேண்டப்பட்ட போதும், சம்மாந்துறை பிரதேசத்திலேயே இந்தப் பயிர்ச் செய்கை வெற்றி அளிக்க கூடியாத இருக்கும் எனவும் மிக கூடிய அளவான நிலப்பரப்பில் பயிர்செய்கையை மேற்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக காணியில் பயிர்ச் செய்கை செய்யப்படுவதனால் விவசாய நிலங்களுக்கு அதிகளவான நைட்ரஜன் கிடைப்பதோடு, வேளாண்மை பயிர்ச்செய்கையில் அதிக விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், யூரியா பசளையின் தேவையினை குறைத்துக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைகின்றது.
இதேவேளை இந்த பாசிப்பயறு செய்கையானது ஏக்கருக்கு சுமார் 300 கிலோ முதல் 400 கிலோ வரையான விளைச்சளைத் தருவதோடு, கிலோ ஒன்றுக்கு (கட்டுப்பாடு விலையைத் தவிர்த்து) 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இன் நிகழ்வில்
விவசாய குழு தலைவர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நெளசாத்,விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பணிப்பாளர் ஜகத் சுதசிங்க , விவசாய திணைக்களத்தின் உதவி விரிவாக்கல் பணிப்பாளர் காமினி செனாரத்ன , ,அம்பாறை மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதி பணிப்பாளார் எப்.எம்.ஏ சனீர்,விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்களான எம்.டி.எம் கரீம்,ஐ.எல் அமீன் ,அம்பாறை மாவட்ட வனவிலங்கு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி மற்றும் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் விவசாய குழு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.