ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு.
ஹட்டன் K சுந்தரலிங்கம்-ஸ்ரீ சுதந்திரகட்;சி பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது அக்காலப்பகுதியில் எவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை விட்டு சென்று ஐ.தேக. இணையவில்லை அண்மையில் கூட கட்சியினுள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக ஸ்ரீலங்க சுதந்திர கட்சி பொது ஜன பெரமுனவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலி;ல் உதவி செய்தது அவ்வாறு உதவி செய்யாதிருந்தால் நிச்சயம் சஜித் வெற்றிபெற்றிருப்பார்.உண்மையான ஸ்ரீ லங்கா கட்சியின் ஆதரவாளர்கள் அவ்வப்போது கட்சி பிளவு படும் போதெல்லாம் கட்சியின் தலைமையுடன் இருந்தனர் அதனால் இன்று இந்த கட்சி அளவுக்கு இருக்கிறது.கடந்த காலங்களில் ஸ்ரீ சுதந்திர கட்சி பிரிந்து சென்று பொது ஜன பெரமுனவினை உருவக்கியது அதில் இருப்பவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை சேர்ந்தவர்கள் ஆனால் சிலர் ராஜபக்ஸ விரோதிகள் என்பதற்காகவே கட்சியினை தனிமையாக போட்டி சொல்கிறார்கள் அவர்கள் உண்மையான கட்சி ஆதரவாளர்கள் அல்ல என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்;.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மஸ்கெலியாவுக்கான தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று 19.06.2020 ஹட்டன் சுற்றுவட்ட வீதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து கருத்து தெரிவிக்கையில் நாங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்ததன் காரணமாக இன்று கோட்டபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றுளாரர்.அவர் வெற்றி பெற்றதன் காரணமாக இன்று நாடு காப்பாற்ற பட்டுள்ளது.
முழு உலகமுமே இன்று கொவிட் 19 என்ற தாக்குதலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் உலகின் ஜாம்பவானா அமெரிக்காவில் கூட 150000 மேல் இறந்துள்ளார்கள் நாலு லட்சததி;ற்கும் அதிகமானவர்கள் பாதிப்புக்குள்ள்ளாகியுள்ளார்கள் இன்று எமது நாட்டில் 11 மரணங்கள் மாத்திரம் தான் இடம் பெற்றுள்ளன அதற்கு காரணம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ முன்னெடுத்த நடவடிக்கையே அவர் இல்லாது வேறு ஒருவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் நிலமை அமெரிக்காவிட மோசமாக இருக்கும்.ஆகவே நான் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதவளித்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன.நாம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் இரண்டும் கால்களில் ஒரு இடத்தில் நிற்க வேண்டும் அப்போது நிச்சயம் எம்மை எவரும் வீழ்த்த முடியாது இன்று நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்த்தது இந்த பகுதியில் முன்னாள் இருந்த அலுத்தம் காரணமாகவே எங்களுக்கு பொது பெரமுனவில் டிக்கட் கொடுக்கவில்லை ஆகவே தான் நாங்கள் நுவரெலியாவுக்கு ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுகிறோம் ஆகவே நுவரெலியா மவாட்டத்தில் இம்முறை கட்டாயம் நாங்கள் ஒரு ஆசனத்தினை பெருவோம். ஆதன் மூலம் நாம் இந்த நாட்டினை விருத்தி செய்வதற்கு கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு ஆதரவளிப்போம் ; என அவர் மேலும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடும் சட்டத்தரணி ஜனஜித் அவர்களின் ஏற்பாட்டடில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நுவரெலியா மாவட்ட குழு தலைவரும் வேட்பாளருமான ரொசான் குணவர்தன. உட்பட பலர் கலுந்து கொண்டனர்.