கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜும்ஆ தொழுகை இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமானது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இன்றையதினம் குறித்த ஜும்ஆ தொழுகை நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெற்றன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐம்பது பேர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டு ஜும்ஆ உரையும் தொழுகையும் நடைபெற்றது.
அத்தோடு, பள்ளிவாசலுக்கு வருகை தந்த நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி போன்ற தகவல்கள் திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
