திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்தியர் அத்தியட்சகர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற வகையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் இன்று(8) தெரிவித்தார்.
உணவகம் ஒன்றில் உணவுப்பொருட்களை பாதுகாப்பின்றி சுகாதாரமற்ற உணவுகளை மண் தூசிகளுடன் செய்து வந்த உணவகம் ஒன்றினையும் அதேபோன்று
வீதியோரத்தில் மண் தூசியுடன் சுகாதார பாதுகாப்பற்ற முறையில் விற்கப்பட்ட உணவு பொருட்கள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றவையாக விற்பனை செய்யப்பட்ட நிலையிலே பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றி அழிக்கப்பட்டதுடன் இரு உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.