நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (18/06) பொகவந்தலாவை டின்சினில் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கூட்டம் சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு தலைமையில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், இ.தொ.கவின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நினைவுகூரப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது ஆளுந்தரப்பில் உள்ள சகலரும், எதிர்த்தரப்பில் நால்வர் பிரசன்னம் ஆகியிருந்தனர்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
பல வருடகாலமாக குளவி கொட்டுக்கு எமது தொழிலாள மக்கள் பாதிப்புக்கு ள்ளாகியே வருகின்றனர். இது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறான பாதிப்புக்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் உயிரிழந்த அட்டன், பன்மூர் தோட்டத்தைச் சேர்ந்த அம்பிகாமலர், மட்டுக்கலை, சென்.கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த அலீமா பீபி (வயது-59), பொகவானையைச் சேர்ந்த ராமன் வெள்ளையம்மா ஆகிய பெண் தொழிலாளரை நினைவு கூர்ந்தார்.
அத்துடன் மறைந்து அமரர் ஆறுமுகன் தொண்டமான் பற்றியும் அவரது அரசியல் பயணம் பற்றியும் நினைவுகூர்ந்ததுடன் அன்னாரின் குடும்பத்தவர்கள், ஏனைய உறவுகளுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
