முஸ்லிம் மக்களின் கலாசார பின்னணிகளை உடைப்பதற்கு உடன்பட முடியாது.! -கலாநிதி.வி.ஜனகன்..!


வி.ஜ.ஊடகப் பிரிவு-
லங்கை அரசமைப்பில் நாட்டின் அனைத்து கலாசாரங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற
சரத்துக்கிணங்க, முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியமான விடயம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்தார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட கலாநிதி வி.ஜனகன்,

“சிறுபான்மையின மக்களுக்கு அதிகமான பிரச்சினைகள் இந்த நாட்டில் இருக்கின்றன. அதில் முக்கியமாக கொவிட் 19 ஆல் பாதிக்கப்படாத ஜனாசாக்களையும் எரியூட்டும் சம்பவங்களும் அண்மையில் நடந்தேறியுள்ளன.
“இலங்கையானது பல்லின மக்களையும் பல மதங்களையும் உள்ளடக்கிய நாடு என்பதை நாங்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் புரிந்து வைத்திருக்கின்றோம்.
“இந்த நாட்டில் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பது எமது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் ஆகும். அந்த அரசமைப்பின் கீழ்தான் இந்த முஸ்லிம் மக்களின் கலாசார பின்னணி மற்றும் கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கைகள் என்பன உள்ளடங்கியிருக்கின்றன.
“ஆனால், திடீரென அந்த கலாசார பின்னணிகளை உடைந்து விடுவோம் என்று கூறும் போது அதற்கு எந்தவிதத்திலும் உடன்பட முடியாது. இதனையே நானும், எமது கட்சியின் தலைவர் மனோ கணேசனும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

“கலாசாரங்களையும் நம்பிக்கைகளையும் உடைக்கும் போது நாடு இரண்டுபட்டுவிடும். எனவே, நாட்டின் தலைவரும் அவர் சார்ந்தவர்களும் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்களா என்ற சந்தேகமும் தோன்றுகிறது.
“ஆகவே, ஜனாசா எரிப்பின் போது உலக சுகாதார அமைப்பு ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது. கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கத் தேவையில்லை, புதைக்கலாம் என்று அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.
“இலங்கையினதும், இந்தியாவினதும் மண்வளம் என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கின்றது. அவ்வாறு இருக்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் ஜனாசாக்களை புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் நமது நாட்டில் ஜனாசாக்களை எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“எனவே, இவ்விடயத்தை மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டும் ஒரு விடயமாகவே நாங்கள் பார்க்கிறோம். அதேபோன்று, எரிக்கப்பட்ட ஜனாசாக்களில் பல கொவிட் 19ஆல் பாதிக்கப்பட்டாதவை என்பது இன்னும் வருந்தத்தக்க விடயமாக இருக்கின்றது.
“இந்தநிலையில், அவர்களின் நோக்கம் கொவிட் 19 னா, மதவாதமா அல்லது இதனை வைத்து அரசியல் இலாபம் தேட முட்படுகிறார்களா என்ற கேள்வி தொக்கி நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை” என்று கலாநிதி வி.ஜனகன், அச் செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -