தேசிய காங்கிரஸின் சாய்ந்தமருது 18ம் வட்டார மக்களுடனான பிரமாண்டமான சந்திப்பு.


2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுள்ள மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கும் சாய்ந்தமருது 18ம் வட்டார பொதுமக்கள் மற்றும் தேர்தல் செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்.எம்.றிஸ்மிர் தலைமையில் 18ம் வட்டாரத்தில் உள்ள அவரது பொதுமக்கள் தொடர்பாடல் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.ஐ.அப்துல் மஜீட், சாய்ந்தமருது பிரதேச செயலக ஓய்வூபெற்ற நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவூச் சங்க இயக்குனர் சபை தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களான தேசிய காங்கிரஸ் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் நூறுல் ஹுதா உமர், மற்றும் தேசிய காங்கிரஸின் தொழிற்துறை செயலாளர் ஏ.சி.எம்.நிஸார் அத்துடன் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் பக்கீர் எம்.நியாஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இப்பிரமாண்டமான மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, கலந்துகொண்ட பொதுமக்களும் தேர்தல் செயற்பாட்டாளர்களும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர் சலீம் அவர்களுடன் இணைந்து தேர்தல் செயற்படுகளை முன்னெடுப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -