திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பிரதேச செயலகம் மற்றும் தோப்பூர் உப பிரதேச செயலகம் ஆகியவற்றில் வழமை போல் மக்களுக்கான அனைத்து சேவைகளும் எமது உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, எமது பிரதேச செயலகத்தில் தங்களது சேவைகளைப் பெற நாடி வரும் பொதுமக்கள் கீழ்வரும் சுகாதார முறைமைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை பேணி நடந்துகொள்ளுமாறு மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக்கினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
1. அலுவலகத்திற்கு தங்களது சேவைகளை பெற சமுகமளிக்கும் போது கட்டாயமாக முகக் கவசம் (மாஸ்க்) அணிந்து வரவும்;.
2. எமது அலுவலக பிரதான நுழைவாயலுக்கருகில் பொருத்தப்பட்டிருக்கும் கைகளை சுத்தமாக்கும் இடத்தில் தங்களது இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவி சுத்தப்படுத்தியதன் பின்னரே அலுவலக பகுதியினுள் உள்நுழையுங்கள்.
3. தங்களது அவசியமான கடமைகளை முடிக்க வரும்போது துணைக்காக மேலதிகமானோரை கூட்டி வருவதை இயலுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
4. கட்டாயமாக சேவை பெற வரும் பகுதிகளில் சமூக இடைவெளிகளை (குறைந்தது 3மீற்றர் இடைவெளி) பேணிக்கொள்ளுங்கள்.
5. எமது அலுவலக வாடிக்கையாளர் கருமப் பீடத்தினுடைய அனுமதி பெறாமல் அலுவலகப் பகுதிகளுக்குள் உள்நுழைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
6. தங்களுக்கான சேவைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் தாமதியாது அலுவலக வளாகத்திலிருந்து வெளிக் கிளம்புங்கள்.
இவ்வறிவுறுத்தல்கள் அனைத்தும் தங்களையும் இந்நாட்டு மக்களையும் கொடிய கொரானாவிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே ஆகும். எனவே, நமது தாய் நாட்டிலிருந்து கொரொனாவை முற்றாக இல்லாதொழிக்கும் அரசாங்கத்தினுடைய வெற்றிகரமான செயற்திட்டங்களுக்கு நாமும் ஒத்துழைத்து பங்களிப்பு செய்வோம்.என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
