மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தோப்பூர் ஏ.எஸ்.றிபாஸ் அவர்களும் அவரின் ஆதரவாளர்களும் நேற்று (08) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கட்சி மாறியுள்ளார்.
இவர்கள் முன்னால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் வேற்பாளருமான எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் அவர்களும் முன்னாள் கிண்ணியா நகர பிதா ஹில்மி மஹ்ரூப், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் மற்றும் மூதூர்,கிண்ணியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
