மனிதத்தை மீட்டெடுத்த கொரோனா!


*"வழித்தடம்" - All University Muslim Student Association*
*Nadha Naleem*
*University of Colombo*


*-“ஆராயப்படாதவாழ்க்கை வாழ்வதற்கு தகுதியற்றது’’(சோக்ரடிஸ்)*
ன்று உலகளாவிய ரீதியில் இன,மத,மொழி பேதமின்றி அனைவரினதும் இரத்தத்தை உறைய வைத்துள்ள பேசு பொருளான COVID 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் முழு மனித இனத்தையும் தன் வாழ்வை ஆராய வைத்துள்ளது. சாதரணமாக தோன்றி இன்று உலகை உலுக்கி மரண பயத்தை கண்முன் நிலைக்கச் செய்துள்ளது. கொரோனா என்கின்ற இந்த வைரஸ் இன்னும் பல வருடங்களுக்கு முன் தோன்றி குணப்படுத்தப்பட்ட நிலையில் 2மாதங்களுக்கு முன் சீனாவின் உகான் நகரில் தோன்றி இன்று உலகை தன் கோரப்பிடியில் சிறைப்படுத்தி தன் வசம் உலகை நிலைப்படுத்தியுள்ளது. 

இந்த வைரஸ் இனம் வெளவால் மற்றும் பாம்பு இனங்களில் இருந்து மனித இனத்திற்கு கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
கடல் கடந்து கண்டம் கடந்து கோள் கடந்த மனித இனத்தின் ஆறாம் அறிவை நிலைகுலைய வைத்து இன மத பேதமின்றி முழு உலகையும் தன் ஆளுகைக்குள் ஆட்படுத்தி வைத்து விஞ்ஞானத்தை பேசுபொருளற்றதாக்கி தானே அரசன் என கிரீடம் தரித்துள்ளது இந்த கொரோனா. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த கொரேனாவின் கீழான எமது நிலை என்ன அது எம்முல் ஏற்படுத்திய மாற்றம் என்ன? என்ற விடை தெரியாக் கேள்வியை நோக்கிய எம் நிலை சற்று ஆராயப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது.பல சவால்களை வெற்றி கொண்ட மனித இனம் இதனால் பல இழப்புகளை சந்தித்துள்ளது என்றால் மிகையாகாது.

நாடுகளின் பொருளாதாரத்தை பாரியளவில் வீழ்ச்சியடைய வைத்து அனைத்து மனித நடவடிக்கைகளிலும் தடங்களை ஏற்படுத்தி சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாரியளவில் சரிய வைத்து வரலாறு காண மரணத்தை கண்முன் காட்டிச் சென்றுள்ள இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி இனி நோக்கலாம். நிச்சயமாக துன்பத்துடன் இலகு இருக்கின்றது என இது புரிய வைத்துள்ளது. இதனால் மனித இனம் பல நேர்மறைத் தாக்கத்தை அடைந்துள்ளது
மனிதன் என்கின்ற நிலை மறந்து இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் இயந்திரமாய் சுற்றித் திரிந்த எம்மை கொரோனா மனிதன் என்கின்ற நிலைக்கு மாற்றி அமைத்துள்ளது. பல உயிர்களை காவு கொண்டு உயிரின் அருமையை உலகிற்கு எடுத்தியெம்பியுள்ளது எனலாம். மனித வாழ்க்கை என்பது வெறும் மாயை நிறைந்த ஒன்று என எடுத்துக்காட்டியுள்ளது. ஓய்வில்லா உழைப்பை தேடி ஓடிய கால்களை ஊரடங்க வைத்து தன் குடும்பத்தினருடன் தனக்கான நேரத்தை செலவிட வைத்துள்ளது. ஏழைகளின் நிலையை அறிய வைத்து ஏழைகளுடனான நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம் மட்டும் வாழ்க்கை அல்ல அதனைக் கடந்து மனிதநேயம் என்ற ஒன்று உள்ளது என எடுத்துக்காட்டியுள்ளது.
ஆராயப்படாத வாழ்க்கையை எடுத்து ஆராயச் செய்துள்ளது. இன, மத, மொழி கடந்து மனித நேயம் என்ற ஒன்றை ஏற்படுத்தி ஒற்றுமை மிகுந்த சமுதாயத்தை கட்டயெழுப்பியுள்ளது.

இயந்திரமயமாக்கப்பட்ட உலகில் மனிதனை மனிதனாக மீட்டுக் கொடுத்துள்ளது. மனிதன் மறந்த மனிதத்தை மீட்டெடுத்து மனித உயிர்களை மீட்டெடுக்க பாரிய பங்காற்றியுள்ளது எனலாம். COVID-19 பயங்கரமான உயிர்கொல்லியாக உருவெடுத்து மனித மான்பை மாற்றியுள்ளது சவால்கள் கடினமானவை தான் அதனில் இருந்த மீட்சி அடைந்தால் நாம் பலமானவர்களாக உருவாக முடியும் என மனிதனுள் மன தைரியத்தை ஏற்புடுத்தியுள்ளது எனலாம். ஏதிர்கால அபாயங்களை சந்திக்க கூடிய வகையில் மன வலிமையை உண்டாக்கியுள்ளது. நான் என்கின்ற நிலை மறந்து முழு உலகையும் நாம் என்ற கோஷத்தை ஓங்கச் செய்துள்ளது.யுத்தம் அற்ற வெடிச்சத்தம் அற்ற இரத்தக் கறை படியாத பலஸ்தீனத்தை உருவாக்கியுள்ளது. தான் தான் அரசன் என ஓலமிட்ட பல வல்லரசுகளை கீழ்மைப்படுத்தி அனைவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளி அமைதியான உலகை பிரசவித்துள்ளது.

அரசியல் பொருளாதார வீழ்ச்சி காணப்பட்டாலும் முழு நாட்டினையும் மனிதம் உள்ள மனிதனாய் மாற்றி அமைத்துள்ளது. வல்லரசுகளாய் தடம் பதித்த அனைத்து வல்லரசுகளும் தன் தடம் இழந்து திசை மறந்து மனிதப் பண்போடு வாழ வழியமைத்துள்ளது இந்த COVID-19.

அரசியல் தலைவர்கள் தன் மக்களை தேர்தல் காலங்களில் மாத்திரம் இரை மீட்டாமல் தன் நாட்டு மக்கள் தன் குடிகள் என சேவை செய்யும் காலத்தை தந்துள்ளது. பாரிய அழிவை இது ஏற்படுத்திய போதும் மனித மாண்பை மறந்த மனித இனத்தை மீட்டியதில் பாரிய பங்கை பெறுகின்றது. இன்று ஒரு வைரஸினால் ஒற்றுமைப்படுத்தப்பட்ட இச்சமூகம் உயிரை காக்க அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு ஊரடங்கு நிலை சுய தனிமைப்படுத்தல் என பல்வேறாக தன்னை காக்க பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இது வரை காலமும் மறக்கப்பட்ட மனித மாண்புகள் இன்று வெளிக் கொணரப்பட்டுள்ளது. சிக்கனம் என்ற ஒரு சொல் வெளிக்கொணரப்பட்டு ஏழைகளின் நிலையை செல்வந்தர்களும் அணுபவித்துள்ளனர். அனைத்தையும் விட இன்று உலகளாவிய ரீதியில் சூழல் நேயம் உருவாகியுள்ளது. மாசற்ற உலகம் தோன்றி இயற்கையை பேண வழிவகுத்துள்ளது. தூய சூழல் உருவாகி மாசற்ற நிலையை அடைந்துள்ளது. இறை மாண்புகளை ஓருகணம் இரை மீட்டும் தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. நிச்சயமாக எந்த ஒரு செயலும் மனிதன் படிப்பினை பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக உள்ளது.

மறந்த மனிதத்தை மீட்டெடுக்க ஒரு களமாக இதனை மாற்றி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் மதித்து COVID - 19ஐ இல்லாதொழிப்போம். அது ஏற்படுத்தித் தந்த நேரான சிந்தனைகளைத் தக்க வைப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -