குணசிங்கபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேகம்


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு குணசிங்கபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஆனி மாத உத்தர நன்நாளினை முன்னிட்டு 5வது வருடமாக வருடாந்த மஹா கும்பாபிசேகம் இன்று ஆலயத்தின் தலைவர் செல்வநாயகம் மற்றும் செயலாளர் எம்.முரளிதாஸ் உள்ளிட்ட நிருவாகிகளின் வழி நடாத்தலில் ஆலயத்தின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளரும் சிவசிறி கனக பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் இடம் பெற்றது.
கடந்த 8நாட்களாக சமய நிகழ்வுகள் இடம் பெற்று இன்று விசேட பூஜைகளும்இ சாமி ரத வீதி வலம் வரும் நிகழ்வும் இடம் பெற்றது. கொரோனா வைரஸ் நோயின் பின்னர் முதல் முதலாக கொழும்பில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் தேர்த்திருவிழா அரசாங்கத்தின் சுகாதாரஇ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக பொலிஸாரின் கண்காணிப்பில் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஆலய விழாவிற்கு பாதுகாப்பு வழங்கிய குணசிங்கபுர பொலிஸாருக்கும்இ சுகாதார அதிகாரிகளுக்கும் ஆலயத்தின் பிரதம குருவால் பொன்னாடை போர்தியும்இ காலாஞ்சியும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -