அம்பாறை மாவட்டத்தில் 76நாட்களாகத் தொடரும் மக்கள்நல நிவாரணச்சேவை!


வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்-

கொவிட்19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைவிட மக்கள் பசியால் பாதிக்கப்பட்ட வீதம் அதிகம். இதனையறிந்து மனிதாபிமானரீதியில் ஊரடங்குச்சட்டத்திற்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு குழுவினர் கடந்த 76நாட்களாக தொடராக உலருணவு நிவாரணங்களை வழங்கிவருகின்றனர்.

கொரோனவால் நாடு முடக்கப்பட்டு மக்கள் குறிப்பாக பின்தங்கிய கிராம மக்கள் உணவுக்காக கையேந்தியவேளை மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 'கொவிட்கெத்து' என்ற அணியினர் உயிரைத் துச்சமென மதித்து களத்தில் இறங்கினர். ஏனையோர் கொரோனா பயம் ஊரடங்கு என்று வீட்டில் முடக்கப்பட்டுக்கிடந்த தருணத்தில் இக்குழுவினர் இவ்விதம் துணிந்து கெத்துடன் வெளியேவந்து இம்மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டுவந்ததை இதயசுத்தியுள்ளவர்கள் பலரும் பாராட்டுகின்றனர்.

இவவர்று அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 76நாட்கள் தொடர்ச்சியாக மக்கள்நல நிவாரணச்சேவையை முன்னெடுத்துவந்த 'கொவிட்கெத்து' அணியினரின் உலருணவு நிவாரணவிநியோகம் மலையகத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மலையகத்திற்கு குறிப்பாக பதுளை மாவட்டத்திலுள்ள லுணுகல சோலன்;ஸ் மற்றும் சுவிங்ரன் தோட்டமக்களுக்கு 250உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு ஜேர்மனில்வாழும் மகான் கோடீஸ்வரனின் வசீகரன்அறக்கட்டளை நிதியம் நிதியுதவியை வழங்கியிருந்தது.

இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர்களான கி.ஜெயசிறில் வி.ரி.சகாதேவராஜா ஆகிய மூவரின் நன்மதிப்பு காரணமாக புலம்பெயர் அமைப்புகள் பல தாமாக முன்வந்து சுமார் 50 லட்சருபா பெறுமதியான உலருணவு நிவாரணங்களை வழங்கிவைத்தது..

இக்குழுவினருக்கு லண்டன் சைவமுன்னேற்றச்சங்கம் சுவிஸ் சூரிச் 'அன்பேசிவம்' பிரிட்டன் 'சிவகாமி அறக்கட்டளை நிதியம்' அசிசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பு வசீகரன் அறக்கட்டளை நிதியம் பிரிட்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியம் கனடா அகவம் அமைப்பினர் கதிர்காமபாதயாத்திரீகர் மணிவாசகர் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனம் போன்ற அமைப்புகள் நிதியுதவிகள் வழங்கின.

அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டி பளவெளி புதியவளத்தாப்பிட்டி அட்டப்பள்ளம் திராய்க்கேணி காரைதீவு கோரக்கர்கிராமம் வீரச்சோலை மண்டானை காயத்ரிகிராமம் மத்தியமுகாம் சவளக்கடை கோபாலபுரம் 7ஆம் கிராமம் நாவிதன்வெளி அன்னமலை சங்குமண்கண்டி உமிரி சங்குமண்கிராமம் தங்கவேலாயுதபுரம் திருப்பதி கஞ்சிக்குடிச்சாறு மணற்சேனை செல்வபுரம் கோமாரி ஊறணி கனகர்கிராமம் நேருபுரம் தாமரைக்குளம் வில்காமம் ஆலையடிவேம்பு பனங்காடு மளவராயன்கிராமம் நாவற்காடு தம்பட்டை ஆகிய பின்தங்கிய பகுதிகளில் உலருணவு நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டன.

'கொவிட்கெத்து' நிவாரணசேவையை பிரதேசசெயலாளர்களுடன் தொடர்புகளை வைத்து உரியவேளையில் உரியவாகனங்களை ஒழுங்கசெய்து மக்களையும் ஒழுங்குசெய்து உரியவேளையில் வழங்கி முகாமைத்துவம் செய்வதவர் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா. அவர் முழுநேரமும் ஈடுபட்டு இப்பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை உலருணவுக்கு அப்பால் பின்தங்கிய திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய கஞ்சிக்குடிச்சாறு பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய வில்காமம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்ப் பிரச்சனைக்கு இக்குழுவினரால் தீர்வு காணப்பட்டிருக்கிறது.
வேளாண்மை மற்றும் சேனைப்பயிச்செய்கையுடன் கூடிய வில்காமத்தின் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பாக அண்மையில் அங்குசென்று கொரோணா உலருணவு நிவாரணம் வழங்கிய 'கொவிட்கெத்து' அணியினரிடம் சேனைப்பயிர்செய்கையாளரும் மகளிரணித்தலைவியுமான திருமதி மேரி பிரஸ்தாபித்திருந்தார்.

இந்நிலையில் பிரான்ஸில் வாழுகின்ற பாண்டிருப்பு உறவுகளின் உதவிகிடைத்தது. இவர்களின் முழுநிதிப்பங்களிப்புடன் இரண்டு 1000லீற்றர் நீர்தாங்கிகள் சகல கட்டுமானங்களுடன் அங்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டன. மேலும் அங்குள்ள 24 சேனைப்பயிர்ச்செய்கையாளர்களுக்கு உலருணவு நிவாரணப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கல்முனைவடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் திருக்கோவில் உதவிபிரதேசசெயலாளர் க.சதீஸ்கரன்காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் ஆகியோர் இந்நிகழ்வுகளில் முழுநேரமும் கலந்துகொண்டிருந்தனர். இணைப்பாளர் சோ.வினோஜ்குமார் சமுகசெயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா வி.மோகன் சோ.தினேஸ்குமார் உள்ளிட்டோர் இப்பொதிகளை கொண்டுசென்று வழங்கிவைத்தனர்.

கூடவே ஊடகவியலாளர்களான பு.கேதீஸ் வ.டினேஸ் ஜே.கே.யதுர்சன் ஆகியோரும் பயணித்தனர்.

பொத்துவில் ஊறணி அறநெறி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு நிதியுதவியும் உலருணவுப்பொதியும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அறநெறி மாணவர்க்கு மதியஉணவு வழங்கப்பட்டு புத்தகம் கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டன.


உலருணவுக்கு அப்பால் குழந்தைகளுக்கான பீடியாபுறோ பால்மாவையும் வழங்கினர். அதுமட்டுமல்ல இரட்டைநிவாரணத்திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயற்படுத்தினர். அதாவது பொத்துவில் ஊறணி மணற்சேனை ஏழைத்தொழிலாளிகளினது உற்பத்திப்பொருட்களை நியாயமானவிலையில் கொள்வனவுசெய்து மரக்கறி தட்டுப்பாடு நிலவும் குறிப்பாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கினர். ஒருவகையில் இது இரட்டை நிவாரணமாகும் . இச்செயற்றிட்டம் தொடர்ச்சியாக 5வது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.இத்திட்டம் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. பலர் குறிப்பாக புலம்பெயர்உறவுகள் பல தாமாக உதவ முன்வந்தன.

மேலும லண்டன் அகிலன் அறக்கட்டளை நிதியத்தினால் 'டிஜிடல்' உடல்வெப்பமானிகள் கல்முனை பிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் பணிமனைக்கு வழங்கிவைக்கப்பட்டது..லண்டன் அகிலன் அறக்கட்டளை ஸ்தாபகர் கோபாலப்பிள்ளையினால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15000ருபா பெறுமதியுடைய 25 கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதனை அம்பாறை மாவட்ட அகிலன் அறக்கட்டளை அமைப்பாளர் சோ.வினோஜ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கு செயறபடுத்தப்பட்ட சகல செயற்பாடுகளும் 3பிரதேசசெயலாளர்களுடன் நாவிதன்வெளி பிரதேசசெயலர் எஸ்.ரங்கநாதன் ஆலையடிவேம்பு பிரதேசசெயலர் க.லவநாதன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசனின் ஒப்புதலுடன் சீராகவும் செம்மையாகவும் நடைபெற்றன.

அம்பாறை மாவடடத்தில் கொரோன நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறைப்படி பிரதேசசெயலரின் அனுமதியோடு தொடர்ச்சியாக 76நாட்கள் நிவாரணசேவையை முன்னெடுத்துவரும் குழுவென்றால் அது 'கொவிட்கெத்து 'நிவாரண அணியிராகத்தானிருக்கும் என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -