ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
இருநுர்று வருட காலமாக எமது நாட்டுக்காக உழைத்த மக்கள் இன்னும் பலர் அதே நிலைமையில் தான் இருக்கிறார்கள்.அவர்கள் அன்று எவ்வாறு வந்தார்களோ இன்று அதே நிலையில் பலர் உள்ளார்கள் இதற்காக இது ஒரு பௌத்த நாடு என்ற வகையில் நாம் கவலையடைய வேண்டும். என முன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மஸ்கெலியாவுக்கான தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று 19.06.2020 ஹட்டன் சுற்றுவட்ட வீதியில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ..
நான் நேற்றிரவு இங்கே வரும் போது நான் கடந்து வந்த பாதையின் இருள் அந்த பாதையின் வளைவு நெளிவுகள் சொல்வது என்னவென்றால் இன்னும் இந்த அட்டன் மஸ்கெலியா மக்களும் இன்னமும் கண்ணீரோடும் வேதனையோடும் வாழும் சனசமூகம் என்று தான் அறிகின்றோம்.
இந்த நிலைமை மாற வேண்டும.ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஒரு தேசியக்கட்சி அது உலகளவில் பேசப்படுகின்ற ஒரு கட்சி அது இந்த நாட்டுக்கும் எங்கள் எதிர்காலத்திற்கும் அடிப்படையாக தேசியத்துவம் பெற்ற கட்சி ஆகையாலே செயலாளர் தயாசிரி ஜயசேகர அவர்களின் தலைமையில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையின் இந்தக்கட்சியினை திரும்ப வளர்த்தெடுத்து இந்த நாட்டுக்கும் எங்களுடைய மக்களுக்கும் தேவையான ஜனநாயகப்பாதையை உருவாக்க முன்வரவேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.
ஜனகீத் அவர்கள் பேசும் போது கூட பல விடயங்களை சுட்டிக்காட்டினால் அதில் மிக முக்கியமாக சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் அதுவே மிக முக்கியமானது என்று ஆகவே அவருக்கு ஆதரவளித்து எதிர்காலத்தில் சமூக மாற்றத்திற்கு வித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் அவர் மேலும் தெரிவித்தார்.