அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஆலோசனையின் கீழ் மத்திய வை.எம்.எம்.ஏ. கிளையும், வை.டப்ளியூ.எம்.ஏ. (பெண்கள் பிரிவும்) இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம், எதிர்வரும் (14) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, கொழும்பு - 09, தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. தலைமையக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சமகாலத்தில் இரத்தத் தட்டுப்பாடு இருப்பதின் காரணத்தினால், தேசிய இரத்த வங்கியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய இத்தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், இந்த இரத்ததான முகாம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக, வை.எம்.எம்.ஏ. யின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்தார். அத்துடன், இந்த நன்மையான காரியத்தில் இன மத பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ள முடியும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
