அதிரடிப் படையினரினால் மக்கள் பாதுகாப்பு கருதி இரசாயனத் திரவம் விசிறல்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையினரால் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினரின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் காணப்படும் இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வாழைச்சேனை/மாவட்ட நீதவான் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அலுவலகம், வாழைச்சேனை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம், வாழைச்சேனை கமநல சேவை திணைக்களம், பேருந்து தரிப்பு நிலையம், பேருந்துகள், வங்கிகள் உட்பட மக்களின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறப்பட்டது.

வாழைச்சேனை விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.பிரேமரத்ன வழிகாட்டலில் இராணுவ பரிசோதகர் எஸ்.எஸ்.வி.பன்டார தலைமையிலான விசேட அதிரடிப் படையினர்கள் கலந்து கொண்டு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களில் தொற்றுநீக்கி இரசாயனத் திரவம் விசுறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -