திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ரஜஎல பிரதேசத்தில் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரொனா வைரஸ் ஏற்பட்டதையடுத்து கந்தளாயில் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக இன்று(1) நடைபெற்று வருகின்றன.
கந்தளாய் நகர்,சந்தைக்கட்டிடம் மற்றும் பஸ் நிலையம் மற்றும் கொரொனா தொற்றுக்குள்ளானவர் நடமாடிய இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினிகள் விசிரப்பட்டு வருகின்றன.
கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை கொரொனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணி வந்த ஒன்பது குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு,இரண்டு கடைகளுக்கும் சீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.சமன் தெரிவித்தார்.
