எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.திருமலை மாவட்ட முன்னாள் எம்.பி.இம்ரான் மகரூப்


எம்.ஏ.முகமட்-
ரசாங்கம் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினை அறியாமல் எப்படியாவது நாம் தேர்தலை நடத்த வேண்டும். பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே உள்ளது.

இன்றோடு எமது இடைக்கால பட்ஜெட் முடிகின்ற காலமாக காணப்படுகின்றது.
ஆனால் இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயல்பாடுகள் குறைவாக காணப்படுகின்றது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்: -
மக்கள் என்கின்ற வகையில் சில விடயங்கள் கவலை அளிக்கின்றன, குறிப்பாக கொவிட் -19 எமது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் மீண்
டுள்ளது.

இதனை தடுக்க அரசு பல வழிகளில் இருந்து பிழை விட்டிருக்கின்றது என்பதனை நாம் சிந்திக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றோம்

குறிப்பாக முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடித்து அதன் பிறகு நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருந்தபோதிலும்
இந்த அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் அந்த வேட்புமனுக்களை
19 ,ஆம் திகதி நடத்த வேண்டுமென்றும்
ஒரு கிழமை இழுத்தடிப்பதில் இவர்களுடைய பங்கு பெரிதாகக் காணப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே தான் இந்த நாட்டை முடக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது.

இன்று நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30, 40 ,50 நோயாளிகள் என காணப்படுகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பரிசோதனை செய்கின்ற அளவு குறைவாகத்தான் காணப்படுகின்றது. இப்போது வரைக்கும் எட்டாயிரம் அல்லது 9 ஆயிரம் பரிசோதனைகள் மாத்திரமே செய்யப்பட்டு 646 இனங்காணப்பட்டு உள்ளார்கள்.

ஜனவரி பெப்ரவரி, மாதங்களில் கூட்டப்பட்ட பாராளுமன்றத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா வைரஸ் பற்றி எழுப்பிய கேள்விக்கு அரசாங்க சார்பில் உள்ளவர்கள் பதில் அளிக்கின்ற போது
மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது. அதனை அவர்கள் பெரிதுபடுத்தி பேசியது மிகுந்த கவலைக்குரிய பதிலாக காணப்பட்டது.

அன்றைய கேள்விகளை உணர்ந்து அன்று நாம் சரியாக செயற்பட்டிருந்தால்
இன்று இந்த நாட்டில் இவ்வாறான ஒரு பாரதூரமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று அரசாங்க சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் கருத்துக்கள் தேர்தலை மையமாக வைத்த கருத்துக்களாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்கள் 28 நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இந்த 28 நோயாளிகளுக்காக நாம் நாட்டை முடக்க முடியுமா எனக் கேட்டிருந்தார்.

டெங்கு போன்ற நோயினால் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற பொழுது நாம் நாட்டை முடக்கினோமா என்று கேட்டிருந்தார்கள் ஆகவே நாம் ஏன் தற்பொழுது முடக்க வேண்டும் என கேட்டிருந்தார்கள்.

அரசாங்க சார்பில் போட்டியிடுகின்றவர்கள் கடந்த காலத்தில் வங்கிகளிலும் ஏனைய இடங்களிலும் சமூக இடைவெளியை பேணி உங்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் ஏன் தேர்தலிலும் அவ்வாறான நடைமுறைப்படுத்த முடியாது என கேள்வி எழுப்பினர்.

யார் எவ்வாறு சீரழிந்தாலும் இந்தத் தேர்தலினை அரசாங்கம் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுக்க வேண்டும் என்ற ஒரு செயற்பாட்டிற்காக இவ்வாறு சொல்கின்றார்கள் என்பதனை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும்
இவ்வாறான செயற்பாடுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகின்றன.

தற்பொழுது கொரோணா பிரச்சினையை பேசாமல் அதற்கு பகரமாக இனவாதத்தை தூண்டி கொண்டிருக்கின்றனர்.
இதனை தனியார் சிங்கள ஊடகங்கள் பிரதானமாக செய்து வருகின்றது.

அது மாத்திரமல்ல கொழும்பு கம்பஹா போன்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற நோயாளிகளை வடக்கு கிழக்கில் கொண்டுவந்து தனிமைப்படுத்தி வைக்கின்றார்கள்.

எத்தனையோ மாவட்டங்களை கடந்து வடகிழக்கில் அவர்களை தனிமைப்படுத்துவது என்பதும் ஒரு இனவாதத்தை தோற்றுவிக்கின்ற ஒரு செயற்பாடாகும் என்ற ஒரு சந்தேகம் எனது மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மீனவத் தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மீனவர்கள் சிறுபான்மையினராக காணப்படுவதனால் அவர்களுடைய நடவடிக்கைகளை முடக்கி குன்றச் செய்வதற்கான ஏற்பாடுகளை நாம் காண்கின்றோம்.

இன்றைக்கு மக்கள் உணவின்றி தவிக்கின்றனர், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அஞ்சுகின்றர், மக்கள் எவ்வாறு தேர்தலுக்கு முன் கொடுக்கும் மனநிலையில் இருப்பார்கள்.

அவ்வாறு தேர்தல் நடந்தால் எத்தனை விதமான மக்கள் வாக்களிக்க தயாரான நிலையில் இருப்பார்கள் என்ற ஒரு கேள்வி எழும்புகிறது.

வாக்களித்ததன் பின்பு வாக்குகளை எண்ணும் பணி களை அரசாங்கம் எவ்வாறு செயற்படும்.

இராணுவத்தினரைப் பயன்படுத்தி தமக்கு சாதகமாக வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட போகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்து கொண்டிருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் இன மத கட்சி வேறுபாடு இன்றி செயல்பட வேண்டும்

இன்று பாராளுமன்றம் கூட்டப்படுவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் இறங்கியிருக்கின்றனர். குறிப்பாக 19- வது சீர்திருத்தத்தில் உள்ள விடயங்களை நாம் மதிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய
5000 ரூபாய் பெரும் ஏமாற்றமாக இருக்கின்றது. ஊடகங்கள் வாயிலாக எத்தனையோ வெளிநாட்டு நிதிகள் இலங்கைக்கு வந்து இருக்கின்றனர்.

இருந்த போதிலும் ஒரு மாதம் ஒன்றரை மாதம் முடக்கப்பட்ட போதிலும் 5000 ரூபாய் எந்த வகையில் மக்களுக்கு போதுமாக இருக்கும்.

மக்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டத்திற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு 5000 ரூபாய் வீதம் வழங்க வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பள விடயங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கின்றது.ஜ

ஆகவே ஒன்றுபட்டு நாம் எமது நாட்டை மீட்டெடுப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -