இன்னொரு மீறியபெத்தையாக மாறுவதற்கு முன் எங்களை காப்பாற்றுங்கள் ஓல்ட்ரிம் மக்கள் கோரிக்கை.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தில் உள்ள தனி வீட்டு திட்டத்தில் கடந்த ஐந்து வருட காலமாக பாரிய மண்சரிவு அச்சுறுத்தலில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள தனி வீட்டுத்திட்டத்தில் பல வீடுகளுக்கு முன்னாலும் பின்னாலும் மூன்று நான்கு அங்குலங்களுக்கு அகலமாக வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.இன்றும் சில வீடுகளில் மண்திட்டுகள் சரிந்து வீழ்ந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இதனால் மூன்று குடும்பங்கள் மாத்திரம் அங்கிருந்து வெளியேறி உள்ளதாகவும் மற்றுமொரு மீறிய பெத்தை உருவாதற்கு முன் தங்களை காப்பாற்றுமாறு இம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரன் அவர்களின் காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட குறித்த வீட்டுத்திட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.அதனால் இந்த 25 வீடுகளில் வாழும் சுமார் 140 பேர் இப்பகுதியிலிருந்து விலகுமாறு 2015 ஆண்டு ஜனவரி மாதம் 13 திகதி நுவரெலியா மண்சரிவு ஆய்வு மற்றும் அவதானம் பிரிவினால் இவர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளன.

எனினும் சுமார் ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவர்களுக்கு எவ்வித ஒழுங்குகளும் செய்து கொடுக்கவில்லை. மழை பெய்யும் போது எங்காவது இடம்பெயர்வதும் மீண்டும் மழை குறையும் போது வீடுகளுக்கு வருவதுமாக தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் இடம்பெயர்வதற்கு கூட எவ்வித வசதிகளும் இல்லாத இடங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தற்போது வீடுகளில் பாரிய அளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.இதனால் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எப்போது வேண்டுமானாலும் மண்சரிவு ஏற்படலாம.; வயது முதிர்ந்தவர்களையும், சிறியவர்களையும் கூட்டிக்கொண்டு எவ்வாறு நாங்கள் ஒதுங்க இடமின்றி ஒதுங்குவது என்று இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இந்த வீடுகளில் தான் வாழ்ந்து வருகிறோம். எப்போது எங்கள் உயிர் போகப்போகிறது என்று கூட தெரியாத அளவுக்கு தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம.; ஏனென்றால் எங்களது வீடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பூமியிலும் பாரிய வெடிப்புக்கள் காணப்படுகின்றன.

இது குறித்த நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. மழை பெய்யும் போது மாத்திரம் இங்கு வருகை தந்து தோட்ட நிர்வாகம் எங்களை ஒதுங்குமாறு சொல்லி எங்களுக்கு சிறுவர் நிலையத்தினை பெற்றுக்கொடுக்கிறது. அதில் இரண்டு குடும்பங்கள் கூட இருக்க முடியாது. மலசல கூட வசதிகள் இல்;லை. மின்சார வசதிகள் எதுவுமில்லை.

சிறுபிள்ளைகளை வைத்து கொண்டு எவ்வாறு அதில் இருப்பது என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தோட்ட நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில் குறித்த பகுதியில் மண்சரிவு ஆபத்து தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து அறிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இவர்களுக்கு தேவையான காணிகளை ஒதுக்கி கொடுத்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கத்தினால் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் முதலில் இரானுவத்தினை கொண்டு நோனா தோட்டத்தில் 10 வீடுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்தால் இவர்களுக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தோட்ட நிர்வாகம் சார்பாக ஒருவர் தெரிவித்தார்.

எது எவ்வாறான போதிலும் தற்போது மண்சரிவ அபாய வலயங்களாக நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள இப் பகுதியும் அவ்வாறான பகுதியே இவ்வாறான நிலையில் அவர்களின் உயிர்களுக்கு எவர் உத்தரவாதம் அளிப்பது என இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -