ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது தொழிலாளர் தேசிய சங்கம் / முன்னணி தேசிய அமைப்பாளர் ஜி நகுலேஸ்வரன் தெரிவிப்பு


தொழிலாளர் தேசிய சங்கத்திற்குள் முரண்பாடு நிலவுவதாக சில சர்ச்சைக்குரிய செய்திகள் அண்மைக்காலமாக உலாவி வருகின்ற நிலையில் அது குறித்த தெளிவுபடுத்தலை வழங்கும் பொறுப்பு பொது அமைப்பு என்ற வகையில் சங்கத்துக்கும் கட்சிக்கும் உண்டு. அந்த வகையில் பொதுவாக எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவதுபோல கருத்து முரண்பாடுகள் எழும் சூழ்நிலைகள் உருவாகின்ற போது அவை பேசி தீர்க்கப்படுகின்றன.

எனவே அதனைச் செய்தியாக்கி குளிர்காய எண்ணுவார் தாங்களே தலைகுணிவை சந்திக்க நேரும் என தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் முன்னணியினதும் தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழிலாளர் தேசிய முன்னணி உயர்பீட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்தவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது 

ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி கட்சியில் உள்ள பல மட்ட தரப்பினர்களில் யாரும் கட்சித்தலைவருக்கோ பொதுச்செயலாளருக்கோ இது வரையில் கோரவில்லை,

யாருக்கும் ஒழுங்கு விசாரணை இடம்பெறவுமில்லை. யாரையும் வழி அனுப்பவும் யாரும் தயாரும் இல்லை. விடைபெறவும் யாரும் தயாராக இல்லை.

கட்சியில் உட்பூசலை ஏற்படுத்தும் நோக்கில் இடைத்தரகர்கனால் பரப்பப்பட்ட வதந்திகள் என்பதை உணர்ந்து சங்கத்தின் / கட்சியின் அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அமைப்பாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -