கொரோனா வைரஸ் காரணமாக வீடுகளில் இருந்தவாறு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர, ஆசிரியர்கள் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் என்ற தகவல்களைத் திரட்டும் படிவங்கள் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்துதல்களுக்கு அமைய ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் குறித்த படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதில் கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி முதல் ஏப்ரல் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்ட முறைகள் உள்ளடக்கிய, பல தகவல்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
