கொரோனா தொற்றில் முடக்கப்பட்ட மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து வழமைக்கு திரும்பி வருகின்றன

அட்டன் கே.சுந்தரலிங்கம்-
 
கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (26) திகதி நாடு முழுவதும் நீக்கப்பட்டதனை தொடர்ந்து மலையகப்பகுதியில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றன.

இன்றையதினம் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய அரச ஊழியர்களின் தேவை கருதி அட்டன் டிப்போ இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 40 பஸ்களை மாவட்டங்களுக்கிடையில் ஈடுபடுத்தியுள்ளதாக அட்டன் டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை அன்றாட நடவடிக்கைகள் படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.மலையக நகரங்களில் உள்ள உணவகங்கள் இன்றைய தினம் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய திறக்கப்பட்டு இருந்தன.
நடைபாதை வியாபாரிகள் தங்களுடைய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருந்தன. 

சிகையலங்கார நிலையங்கள் சுகாதார நிபந்தனைகளுக்கு அமைய திறக்கப்பட்டு தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் அத்தியாவசிய தேவை கருதியே நகரங்களுக்கு வருகை தந்திருந்தமையால் வர்த்தக நிலையங்களிலும் ஏனைய அரச நிறுவனங்களிலும் நெரிசல் குறைவாகவே காணப்பட்டன.

கொழும்பு கம்பஹா உட்பட நாடு முழுவதம் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்று நீக்கப்பட்ட போதிலும் இன்றைய தினம் மலையகப் பகுதியில் இருந்து அவிஸ்ஸாவலை வரை மாத்திரமே தனியார் மற்றும் இ.போ.ச தேவையான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -