கோலாகலமாக அரங்கேறவுள்ள கலாமித்ரா விருது விழா!



லை, இலக்கியம், சமூக சேவை உள்ளிட்ட பல்துறைகளில் சிறப்புப் பங்களிப்பு வழங்கி வரும் புதிய அலை கலை வட்டம் தனது 45 ஆண்டுகால கலைப் பயணத்தைத் தாண்டி, 46ஆவது ஆண்டில் கால்பதிக்கின்றது. இவ்வமைப்பு 1995ஆம் ஆண்டு ஆரம்பித்த விருது வழங்கும் விழாவை, இம்முறை 20ஆவது ஆண்டின் நினைவூட்டும் நிகழ்வாக கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இவ்விழாவின் முக்கிய நோக்கம், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் இளைய தலைமுறையினரின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்குதல் என்பதாகும். அந்த அடிப்படையில், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காக பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி சிறுகதை, கட்டுரை, கவிதை, சித்திரம், மருதாணி அலங்காரம்,
பாடல், நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் சிறந்து விளங்கும் 25 வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.


மேலும், சினிமா, நாடகம், இசை, இலத்திரனியல் ஊடகம், அச்சு ஊடகம், நடனம், படைப்பாக்கம், அழகுக் கலை, சமூக சேவை மற்றும் சமூக சேவை அமைப்பு எனும் பத்து துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு “கலாமித்ரா விருது” வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

இவ்வருட விழாவின் விசேட அம்சமாக, மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 10 சமூக சேவையாளர்கள் மற்றும் கலைஞர்கள், சமகாலத்தில் தொடர்ச்சியாக கலை மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் மேலும் 15 பேருக்கு
சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம், மொத்தமாக 50 பேருக்கு விருதுகள் வழங்கப்படும் இந்தப் பெருவிழா,
👉 வரும் 30ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு,
👉 கொழும்பு – 11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த விழா, புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர், கலைஞரும் ஊடகவியலாளருமான ராமேத்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, ஹாசிம் உமர் பவுண்டேஷன் நிறுவனர் ஹாசிம் உமர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் டாக்டர் பி. ஆறுமுகபாண்டியன், தமிழக சூரியா வைத்தியசாலையின் பிராந்திய இயக்குநர் பி.கே. சரவணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர்.

கலை, இலக்கியம், சமூக சேவை எனப் பல தளங்களில் சாதனை புரிந்தவர்களை ஒரே மேடையில் கௌரவிக்கும் இந்த கலாமித்ரா விருது விழா, கலை உலகிற்கு ஊக்கமும் ஊற்றுமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :