பழைய பாரளுமன்றம் தானாகவே செயற்பட ஆரம்பிக்கும்! முன்னாள் கல்வியமைச்சர்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
னாதிபதி பாரளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய June மாதம் 2ம் திகதிக்கு முன்னர் பாரளுமன்ற தேர்தலை நடத்தி பாரளுமன்றத்தை கூட்ட முடியாது போனால், பழைய பாரளுமன்றம் தானாகவே செயற்பட ஆரம்பிக்கும் என UNPயின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது தெரிவித்துள்ளதாவது:-
பாரளுமன்ற தேர்தல் நடத்த இருக்கும் வசதிகள் சம்பந்தமாக எதனையும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலுக்கான திகதியை வழங்கினார் என்பது அவரது தெளிவுப்படுத்தல் மூலம் நாம் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அரசியலமைப்பு ரீதியான பிரச்சினை இருப்பதும் அவரது பேச்சின் மூலம் உணர முடிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் புதிய பாரளுமன்றத்தை ஜூன் மாதம் 2ம் திகதிக்கு முன்னர் கூட்ட முடியாது என்றால், பழைய பாரளுமன்றத்தை தானாகவே கூட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -