எம்.ஜே.எம் பாரிஸ்-
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் தங்களை தவறாக வழிநடத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்
இவ் விவகாரத்தில், சம்பந்தம் இல்லாதவர்களுக்கே தெரிந்த பிறகுதான் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு பல விஷயங்கள் தெரிய வந்துள்ளதென்றும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு தெரியாத பல விஷயங்கள் தங்களுக்கு தெரியவந்திருப்பதாகவும், ஒன்று அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்ததை மறைத்திருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ் சாட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் ஊதுகுழல் போல மாறியிருப்பதாகவும் $400 Million ( சுமார் 7,600 கோடி ரூபா ) முதல் $500 Million ( சுமார் 9,500 கோடி ரூபா ) வரை அமெரிக்காவே உலக சுகாதார ஸ்தாபனமே நிதியுதவி வழங்குவதாகவும், சீனாவோ வெறும் $38 Million ( சுமார் 722 கோடி ரூபா ) மட்டுமே நிதியுதவி வழங்குவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.