மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல்



தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கையை அடுத்தே பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரசைத் தடுக்கும் விசேட செயலணியின் விசேட கூட்டமொன்று, செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தலைமையில் 26.4.2020 அலரி மாளிகையில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக பிரதமரரின் பெருந்தோட்டத்துறை இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சருமான மருதபாண்டி ரமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கனபதி கனகராஜ், பிலிப்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக பி.சக்திவேல் தெரிவிக்கையில்

பெருந்தோட்டத்துறை சார்ந்த ஐந்து முக்கிய விடயங்கள் செயலணியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. 

பெருந்தோட்டத்துறையில் மிகக் குறைந்தோரே தேர்ந்தெடுக்கப்பட்;டு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது.

 கிராமங்களைப் போன்று பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதால் இங்கு குறைந்தளவிலானோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை அடுத்து இந்த புதிய திருத்தத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. இதன்மூலம் மலையகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 5000 ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரூபா 5000 நிவாரண தொகை அநேகமானருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மந்த கதியில் நிவாரணம் வழங்கும் பகுதிகளில் அவற்றைத் துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிவாரணத் தொகை கட்டம் கட்டமாகவே வழங்கப்பட்டு வருகிறது. 

விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டதற்கமையே நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சிக்காரர்கள் குழப்பம் ஏற்படுத்தி, இந்த வேலைத் திட்டத்தை குழப்பி, மக்களுக்கும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடுகளை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். 

எனினும், மக்கள் அரசாங்க உத்தியோகத்தரகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் விரைவில் இந்த நிவாரணங்களை அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், ஏற்கனவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பில் பணிபுரிந்த நிலையில், மலையகத்திற்கு திரும்ப முடியாமல் எஞ்சியிருக்கும் இளைஞர்களை ஊர்களுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -