அட்டாளைச்சேனை மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை - மூட நடவடிக்கை எடுப்பு


பாறுக் ஷிஹான்-

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

சனிக்கிழமை(25) குறித்த மாடறுக்கும் மடுவத்திற்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சகிதம் சென்று பார்வையிட்ட பின்னர் குறித்த மடுவத்தை மூட நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது முஸ்லீம் மக்களின் ரமழான் ஆரம்பமாகி உள்ள நிலையில் சுத்தமான இறைச்சிகளை வழங்குவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே சம்பந்தப்பட்டவர்கள் குறித்த மடுவத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் திறந்து விடுவதாகவும் மேலும் கூறினார்.

மடுவத்தில் நீர் வசதியில்லை. வாளிகள் கூட இல்லை. பாதுகாவலர் கூட அங்கில்லை. 

அப்படியென்றால் நாம் என்ன செய்வது' எனக் கேள்வி எழுப்பினார்.மக்களின் சுகாதார விடயத்தில்இ அதுவும் உணவுடன் தொடர்புபட்ட சுகாதாரத்தில் யாரும் அசட்டையாக இருந்து விடவும் முடியாதுஇ அதனை அனுமதிக்கவும் முடியாது என கூறினார்.
Attachments area

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -