எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பினால் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் வாழைச்சேனை பொது மைதானத்திலும், ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்திலும் இயங்கி வரும் சந்தைக்கு வரும் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் இன்று வியாழக்கிழமை வழங்கி வைத்தனர்.
இதில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வர்த்தக சங்கத்தினர், கல்குடா ஜனாஸா நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின்; நிருவாக உறுப்பினர்கள், ஆலோசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சந்தைக்கு வரும் மக்கள் முகச்கவசம் அணியாது வருபவர்களின் பாதுகாப்பு கருதி முகச்கவசம் மற்றும் கொரோணா நோயில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு கொரோணா நோயில் இருந்து மக்களையும், பிரதேசத்தினையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது தொடர்பிலான சுவரொட்டிகளும் பொது இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டது.