எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவினரால் தொற்று நீக்கி விசிறும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார அலுவலக பிரிவில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு சுய தனிமைப்படுத்தல் முடிவடையும் காலத்திற்கு முன்னர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்த காரணத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து விட்டு நாட்டின் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக சொந்த இடமான வாழைச்சேனை பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தார்.
குறித்த நபர் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்த சமயம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில் கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் வாழைச்சேனையில் குறித்த நபரின் இல்லம் அமைந்துள்ள வீதியில் தொற்று நீக்கி விசிறும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.