100 மீட்டர் தொலைவில் இருந்தே கொரோனா பாதிப்பைக் கண்டறியும் கருவி - ஈரானின் அசத்தல் கண்டுபிடிப்பு


5 நொடிகளில் கொரோனாவை கண்டறியும் ஸ்மார்ட் கருவியை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை 100 மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் ஸ்மார்ட் கருவியை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈரானின் புரட்சிகர படைப்பிரிவு உருவாக்கியுள்ள இந்த கருவியின் அறிமுக விழாவில் தளபதி ஹுசைன் சலாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தக் கருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 5 நொடிகளில் கண்டறிந்து தெரிவிக்கும் என கூறினார்.

கருவியின் ஆண்டெனா காட்டும் திசையில் 100 மீட்டருக்குள் வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்தப் பரிசோதனையின்றி நோயாளிகளை விரைவாகக் கண்டறிவதோடு, கிருமியின் தாக்கம் இல்லாத பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது தவிர்க்கப்படும் என்றும் சலாமி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -