ஹொங்கொங்கில் ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மனிதனிலிருந்து விலங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 60 வயது பெண்ணுக்கு குறைந்தளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது செல்லப்பிராணியான பொமரேனியன் (Pomeranian) நாயை வைத்தியர்கள் பரிசோதனை செய்தனர்.
இதில் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு மிக ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. ஆனால் கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் அந்த நாயிடம் வெளிப்படையாக தென்படவில்லை. இதைத் தொடர்ந்து அந்த நாய் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கொரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கியதும் அதை உரியவரிடம் ஒப்படைக்க வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.