ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சம்பள முரண்பாடு போன்றவைகள் தொடர்பாக விளக்கமளிக்க இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் (05) வியாழக்கிழமை ஓட்டமாவடி பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்களை சந்தித்துப் பேசிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், எதிர்காலத்தில் ஆசிரியர்களின் அனைத்துவிதமான கோரிக்கைகளையும் சட்டரீதியா பெற்றுக்கொள்ள பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
குறித்த சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், உப தலைவர் எம்.சமீன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
