சம்மாந்துறை கோரக்கர் தமிழ்மகா வித்தியாலய அதிபர் எம். விஜயகுமாரன் (01) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த அவர் மேற்படி பாடசாலையில் 17 வருடங்கள் அதிபராக அரும்பணியாற்றினார்.
அவரது பூதவுடல் (01)பகல் பாடசாலையில் இறுதிமரியாதையும் இரங்கல் நிகழ்வும் பதில் அதிபர் கி.இளங்கோவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அங்கு மாணவரும் ஆசிரியர்களும்பொதுமக்களும் அழுதழுது இறுதி அஞ்சலிசெலுத்தினர்.
அங்கு அவரால் நிருமாணிக்கப்பட்ட விஜயகுமாரன்அரங்கிலே பூதவூடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இரங்கல்நிகழ்ச்சி இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதமகணக்காளர் எம்.எ.றபீக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எ.சபூர்தம்பிஉள்ளிட்ட பலர்இரங்கலுரையாற்றினர்.
அதன்பின்னர் பூதவுடல் அவரது பாண்டிருப்பு இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
விளையாட்டுகலை கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகளில் தனதுபாடசாலையை முன்னணியில் இருக்க வைத்ததோடுகடந்த வருட க.பொ.த.சா.தரபரீட்சைப் பெறுபேற்றில் 12மாணவர்கள்தோற்றி அனைவருமேஉயர்தரத்திற்கு செல்வதற்கான 100வீத சித்தியையும் பெறக்காரணமாயமைந்தவர்.
சிறந்த வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பித்தல்போட்டியில் சிறப்பு விருதினை வலயத்திலே கோரக்கர் தமிழ்மகாவித்தியாலயம் பெறுவதற்கு அச்சாணியாகஇருந்தவர்அவர்.
அவர் இரு பெண்பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார்.
எதிர்வரும் 7ஆம் மாதம் 60வயதையடைந்ததும் ஓய்வு பெறவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல் மாலை பாண்டிருப்பு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருந்தது.






