காதர் மஸ்தானின் முயற்சியால் வவுனியா பாவற்குளம் மற்றும் சூடுவெந்த புலவு ஆகிய கிராமங்களில் தாய் சேய் சுகாதார நிலையங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களது முயற்சியால் வவுனியா பாவற்குளம் மற்றும் சூடுவெந்த புலவு ஆகிய கிராமங்களில் தாய் சேய் சுகாதார நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிராமங்களில் வசித்து வரும் மக்கள் நீண்டகாலமாக மேற்படி சுகாதார நிலையங்கள் இன்றி பல்வேறு பட்ட கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.
இந்த தமது துயர நிலையை போக்குவதற்காக பல அரசியல்வாதிகளிடமும் அம் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தும் பயனற்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களிடம் அம் மக்கள் தமது நிலமையை முறையிட்டதற்கிணங்க அவர் எடுத்த முயற்சியின் பலனாகவே மேற்படி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
இன்று (1) நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் மேற்படி சுகாதார நிலையங்களை உத்தியோக பூர்வீகமாக திறந்து வைத்தார்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரன், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் திரு.ரி திரேஸ்குமார்,
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு.கே.சிவாகரன்,
வெங்கலச்செட்டிகுளம் மாவட்ட.வைத்திய அதிகாரி டாக்டர்.வி.சுரேந்திரன், ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு நிலையமும் தலா இருபது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -