இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை சபையின் யோசனையில் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக்கொண்டமை தொடர்பில் முன்னாள்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்று 2015ம் ஆண்டு இலங்கை கடுமையான நெருக்கடிக்குள் இருந்த போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
இதன் அடிப்படையில் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருந்த நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் ஜெனீவாவின 30-1 யோசனைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது.
இதன் காரணமாக இலங்கையின் இறைமை, மீள்ளெழுச்சி, கௌரவம் என்பன பாதுகாக்கப்பட்டன. இழந்துப்போன மதிப்பை இலங்கை மீண்டும் பெற்றுக்கொண்டது.
அத்துடன் இலங்கை தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் விடயத்தை உறுதி செய்யும் செயற்பாட்டை சர்வதேசத்திடம் கொடுக்காமல் தாமே வைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்த இணை அனுசரணை 2015ம் ஆண்டு October மாதம் 1ம் திகதி கொண்டு வழங்கப்பட்டது. இந்த யோசனைக்கு இலங்கையின் இணை அனுசரணையை வழங்குவற்கு முன்னர் அது தொடர்பில் பெரிதும் தொலைபேசி மூலமாகவே கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன் போது தாமும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் நியூயோர்க்கிலுள்ள விருந்தகமொன்றில் தங்கியிருந்ததாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவு செயலாளர், அமரிக்காவுக்கான தூதுவர் , பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவும் எடுக்கப்பட்டது.
இதனையடுத்தே இணை அனுசரணை முடிவு ஐ. நா ஜெனீவா அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதென்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமது பிரச்சினைக்கான தீர்வை தாமே சர்வதேசத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தாமே தீர்த்துக் கொள்வது.
LTTEயினர் உட்பட ராணுவம், பொலிஸார் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டில் அமைக்கப்படும் நடைமுறையின் கீழ் தீர்வைக் காண்பது.
சர்வதேசத்துடன் இணங்கிய உறவை கொண்டு செல்வது என்ற மூன்று அடிப்படையிலேயே இந்த இணை அனுசரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அந்த அனுசரணையில் இருந்து விலகிக்கொள்வதால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.