ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியத்தின் பத்திரிகையாளர் மகாநாடு

அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) ஒழுங்கு செய்திருந்த ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கும் பங்கேற்கும் பழைய மாணவர் குழுக்களுக்கும் விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மகாநாடும் சம்பியன் கிண்ணத்தினை உத்தியோக புர்வமாக கையளிக்கும் நிகழ்வும் , ரீ சேட் அறிமுக நிகழ்வும் இன்று ( 1) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

SOFA அமைப்பின் பணிப்பாளர்களான முஹம்மட் பிரிம்ஸாத் , அலி ரஜாய் , ஸாஹிருல் இம்தியாஸ் , றமீஸ் மௌலானா , மௌஸும் மீராசாஹிப் , அஸ்லம் ஸிஹான் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 29 பழைய மாணவர்கள் குழுக்கள் மேற்படி சுற்றுப் புாட்டியல் பங்கேற்கவுள்ளன. இப் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை கல்முனை ஸாஹிரா தேவியக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. நொக்கட் முறையில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் கொண்டதாக இப் போட்டி அமையவுள்ளது.

மஞ்சள் குழுவில் ஸஹிரியன் 90 அணி , உஸ்பா 91 அணி , ஸஹிரியன் 92 அணி , ஸஹிரியன் 90 ” ஸ் அணி , நொட் அவுட் 92 அணி , பவர் பிளேர்ஸ் 96 அணி , சுப்பர் ஹீரோஸ் 97 அணி , ஸஹிரியன் 98 அணி ஆகியனவும் , பச்சை குழுவில் ஸெஸ்டோ 99 அணி , ஸஹிரியன் வை 2 கே அணி , கிளசிக்கல் சீரோ வன் அணி , யுனைடெட் ஸஹிரியன் 2 ஓ அணி , பும் பும் ஸஹிரியன் அணி , அலியார் ரெஜிமென்ட் அணி , பெச் ஓ 5 அணி ஆகியனவும் , சிவப்பு குழுவில் ஸஹிரியன் லயன்ஸ் அணி , சுப்பர் வொரியஸ் அணி, கஜபா 08 அணி , கிறிக் 90 அணி , 91 மெட்ஸ் ( குழுமம்) அணி , ரீம் 92 அணி , மெக்ஸ் சாஜர்ஸ் அணி ஆகியனவும் , நீல குழுவில் கிளாஸ் ஒப் தேர்டீன் அணி , லெஜன்ஸ் ஒப் ஸாஹிரியன் அணி , ஸஹிரியன் விக்கின்ஸ் அணி , 16 ஸஹிரியன்ஸ் , ஸஹிரியன் வொல்வ்ஸ் அணி , ரீம் 99 அணி , ரீம் 2 கே அணி ஆகியன பங்கேற்கவுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில் சம்பியனகளாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 25,000 ரூபா பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும் , இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 15,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

இச்சுற்றுப் புாட்டிக்கு மெற்றோபொலிடன் கல்லூரி புரண அனுசரணையினையும் CIMA நிறுவனம் இணை அனுசரணையினையும் வழங்கவுள்ளன.
மெற்றோபொலிடன கல்லூரியில் இக்கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு இலவசமாக டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா கற்கை நெறியினை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை வழங்குவதற்கான உத்தியோகபுர்வ ஒப்பந்தத்தை கல்லூரி அதிபரிடம் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் , மெற்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கையளித்தார்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -