மீண்டும் மகிந்தவுடன் இணையும் UNPயின் பாரளுமன்ற உறுப்பினர்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

UNPயின் குருணாகல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.P நாவின்ன, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளார்.

UNPயில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தியால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் UNPயை சேர்ந்த பல பாரளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை வழங்க பொதுஜன பெரமுன கட்சி இணங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் UNPயில் குருணாகல மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்த பின் October 26யில் நடைபெற்ற அரசியல் புரட்சியில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் UNPயின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து S.P நாவின்ன செயற்பட்டு வந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -