தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸணன் உறுதி.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
லையகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது என அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். எனவும் இது தொடர்பாக நாம் கலந்து பேசி தீர்மானிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் முன்னால் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10 வது ஆண்டு நினைவுப் பேருரையும் மலையகத்தில் இருந்து சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த இளைஞர் யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.01.2020) மாலை ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் மலையக முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது மலையகத்தில் இருந்து சென்று சர்வதேச மட்டத்தில் சாதனை புரிந்த 6 விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.பொன்னாடை போர்த்தி நினவுப்பரிசும் அவர்களின் தேவைகளுக்காக ஒரு சிறு தொகை பணப்பரிசும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த வேலுசாமி இராதாகிருஸ்ணன்
எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் சிறுபான்மை கட்சிகளுக்கு. அந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய அங்கத்தினர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாது என அந்த கட்சியின் முக்கிய உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக நாம் கலந்து பேசி தீர்மானிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் முன்னால் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10 வது ஆண்டு நினைவுப் பேருரையும் மலையகத்தில் இருந்து சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த இளைஞர் யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.01.2020) மாலை ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் மலையக முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது மலையகத்தில் இருந்து சென்று சர்வதேச மட்டத்தில் சாதனை புரிந்த 6 விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.பொன்னாடை போர்த்தி நினவுப்பரிசும் அவர்களின் தேவைகளுக்காக ஒரு சிறு தொகை பணப்பரிசும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த வேலுசாமி இராதாகிருஸ்ணன்
எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் சிறுபான்மை கட்சிகளுக்கு. அந்த தேர்தலில் நாங்கள் எங்களுடைய அங்கத்தினர்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அதே நேரத்தில் சிறுபான்மை கட்சிகள் அனைத்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -