நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்குவதற்கான புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான புதுவருட உறுதி மொழியை சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் (01) புதன்கிழமை மேற்கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.
இதன்போது நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்
இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜஃபர், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஐ.சுஹைர், தலைமைக் காரியாலய சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.சபீர், சமுர்த்தி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.றஸீட், கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜஃபர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.