மதுபான உற்பத்திக்கு அவசியமாகின்ற எத்தனோலை (Ethanol) இறக்குமதி செய்வது தடை செய்யப்படுகின்றது.
ஜனவரி முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலாகும் வகையில் நிதி, பொருளாதார மற்றும் கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பெருமளவில் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.